கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவனம் நடத்தி வரும் முதியோர் காப்பக புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு தமிழக பாரத ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை வருகை தந்தார் அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் அதிகமாக குற்றச்சம்பவங்கள் நடப்பதற்கான காரணம் மூன்று விஷயங்கள் சாராயம் ஆறாக ஓடுகிறது தமிழகத்தில் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது டாஸ்மாக் மூலம் மதுவை அரசே விற்பனை செய்து வருகிறது
போதை பழக்கம் பணக்காரர்களிடமிருந்து நடுத்தர மக்களிடம் பரவி தற்போது ஏழை மக்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது

காவல்துறை தமிழக அரசும் இரும்பு கரம் கொண்டு போதை வஸ்துகளை கட்டுப்படுத்த வேண்டும் சிறுவர்கள் தற்போது கஞ்சா மற்றும் மதுப்பழக்கத்தால் அருவாள் எடுத்து மிரட்டுவது வாடிக்கையாகிவிட்டது ரவுடிகள் கஞ்சா போதையில் தினந்தோறும் கொலை செய்வது வாடிக்கையாகிவிட்டது எனவே அரசு இதனை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என தெரிவித்தார்