கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-

அரியலூர் நகரில் வளர்ச்சி திட்ட பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவு கிணங்க அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் துவக்கி வைத்தார்

அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா முன்னிலை வகித்தார் அரியலூர் நகருக்கு வருகை தந்த அமைச்சரை நகராட்சி தலைவர் சாந்தி தலைவாணன் நகர திமுக செயலாளர் இரா முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் இரா பாலு நகராட்சி துணைத் தலைவர் கலியமூர்த்தி அயலக அணி துணை அமைப்பாளர் தங்கை எழில்மாறன் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் அருண் ராஜா நகராட்சி கவுன்சிலர்கள் அன்பு ராஜேஷ் மலர்கொடி மனோகரன் சத்தியா ரேவதிராமு ஜி.கே கண்ணன் ராணிசந்திரசேகர் ஜெயந்திகுணா செல்வராணி பரமேஸ்வரன் மாவட்ட ம தி மு க செயலாளர் ராமநாதன் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன் மாலா தமிழரசன் ஐ பி மணிவண்ணன் கோவிந்தபுரம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பூபதி உதய முத்துப்பாண்டியன் ஆசிரியர் நல்லப்பன் ம தி மு க ஒன்றிய செயலாளர் சங்கர் நகராட்சி கருணாநிதி உட்பட ஏராளமானோர் சால்வைகள் மலர்மாலைகள் அனுவித்து அமைச்சரை வரவேற்றனர் நகரப் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது