தேனி மாவட்டம் போடியில் முன்னாள் கேரள முதல்வர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் – புகழஞ்சலி நிகழ்வு

மூத்த இடதுசாரி தலைவர், கம்யூனிஸ்ட் போராளி, முன்னாள் கேரள மாநில முதல்வர் தோழர் V.S. அச்சுதானந்தன் அவர்களின் மறைவையொட்டி, போடி நகரில் CPI(M) கட்சியின் சார்பில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே இன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இந்த இரங்கல் கூட்டத்தில் இ.க.க (மா-லெ) விடுதலை கட்சியின் சார்பில் தோழர் அச்சுதானந்தன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டோம்

நிகழ்வில் இடதுசாரி தோழமை கட்சிகள், முக்கிய பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, தோழரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது வாழ்க்கைப் பணி, சமூக நீதிக்கான பங்களிப்பு, தொழிலாளர் நலனுக்காக செய்த உழைப்பு ஆகியவை நினைவு கூறப்பட்டு, பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்கான ஊக்கமாக தொடர்ந்து உயிர்ப்பாக இருக்கும் என அனைவரும் உணர்வுபூர்வமாகப் பேசினார்கள்.

தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களின் நினைவு நம் நெஞ்சங்களில் என்றும் நிலைக்கும்! புரட்சி வாழும் வரை, தோழர் உயிருடன் இருப்பார்.! என முழக்கமிட்டனர்