எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்சம் காசோலையை சீர்காழி எம்எல்ஏ வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த அருண்சங்கர் (வயது 22), சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்த சிபிராஜ் (வயது 21) ஆகிய இருவரும் கடந்த 20 ம் தேதி சீர்காழி அருகே பனங்காட்டங்குடி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று மூன்று லட்ச ரூபாய் காசோலை அவர் குடும்பத்தினருக்கு வழங்கினார்.இதில் சீர்காழி வட்டாட்சியர் அருள் ஜோதி, சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் ஹரிஹரன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மற்றும் திமுக மாவட்ட வர்த்தக அணி தலைவர் மற்றும் நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அருண்குமார்
மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.