மணலி புதுநகர் ஜூலை. 18 உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மகளிர் உரிமைத் தொகை கோரி ஏராளமானோர் விண்ணப்பம் அளித்தனர். மணலி புதுநகர் 15 வது வார்டுக்கு உட்பட்ட சிறப்பு முகாம் மணலி பள்ளியில் நடந்தது. மண்டல குழு தலைவர் ஏவி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத் தொகை கூறி 740 பேர் உட்பட 1150 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் .செயல் பொறியாளர் தேவேந்திரன் பகுதி செயலாளர் புழல் நாராயணன் கவுன்சிலர் நந்தினி சண்முகம் திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் மணலியில் 20 வது வார்டுக்கு உட்பட்ட சிறப்பு முகாமில் 950 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 355 மனுக்கள் மகளிர் உரிமைத்தொகை கோரி பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் மண்டல பொறுப்பு உதவி கமிஷனர் தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்
