மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர். ஆசிரியர் இயக்கங்களின்பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்) சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு டிட்டோ-ஜாக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்ல
பாண்டியன் தலைமைவகித்தார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடை நிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், அரசாணை 243- ஐ உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக் கங்களை எழுப்பியவாறு மதுரை பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்சு ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தி னர்.
ஆனால், தொடர்ந்து போராட் டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு, பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால், 70 பெண்கள் உள்பட 200 பேரை திடீர்நகர் போலீசார் கைது செய்தனர்.
