துறையூர் ஜூலை
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் கர்மவீரர் காமராஜரை பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக திருச்சி சிவாவை கண்டித்து துறையூர் நாடார் பேரவை சார்பில் வழக்கறிஞர் ராமசாமி தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாடார் பேரவை தலைவர் ஆதித்தன் ராஜன், துணைத் தலைவர் மனோகரன்,துணைத் தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கவுரவ தலைவர் சுரேஷ், செயலாளர் ரவி துணை செயலாளர்கள் இளவரசன், ஆனந்த், செல்வம், சுரேஷ் ,வேல்குமார், ராஜசேகர் மற்றும் இளைஞர் அணி மாடசாமி,ஆனந்தன், இளவரசன்,கணேசன், ரஞ்சித் சதீஷ்,சுரேஷ், ஜெகன், கிரேஸ், சரவணன் உள்ளிட்ட நாடார் உறவின்முறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.துறையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெள்.நாகராஜூ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
