கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மெர்சி ஊமன், பள்ளி தாளாளர் பிலிப் ஆர்.ஜே. பவுலர், கௌரவ பொருளாளர் டாக்டர் ஜேம்ஸ் ஜே. ஞானதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் ஐலின் ஜெத்ரோ வரவேற்புரையாற்றி ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பள்ளியின் 10 ஆண்டு சாதனைகளை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் அரங்கேறின.விழாவில் சிறப்புரையாற்றிய தாளாளர் பிலிப் ஆர்.ஜே. பவுலர், ஸ்டேன்ஸ் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் நிறுவனர் சர் ராபர்ட் ஸ்டேன்ஸின் சேவைகளை நினைவுகூர்ந்தார்.
கோவையில் கல்வி வளர்ச்சிக்காக ஸ்டேன்ஸ் பள்ளியையும், வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் ஸ்டேன்ஸ் நூற்பாலை மற்றும் ஸ்டேன்ஸ் மோட்டார்ஸையும் தொடங்கி, கோவையை தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்” ஆக உருவாக்க அடித்தளம் அமைத்தவர் ராபர்ட் ஸ்டேன்ஸ் எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஜி.டி. நாயுடுவின் தொழில்நுட்ப ஆர்வத்தை ஊக்குவித்தவர்களில் அவரும் ஒருவர் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து,நடைபெற்ற விழாவில், பொதுத்தேர்வுகள் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.விழாவில் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், முதல்வர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
