மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தின் முன்புற பகுதியில் இருந்து 76 மினி பஸ்களுக்கு புறப்படுவதற்கான அனுமதி வழங் கப்பட்டன. இந்த மினி பஸ்கள் அரசு டவுண் பஸ்கள் நிற்கும் இடத்திலேயே நிறுத்துவதால் தினந்தோறும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட் டது.
இதனை தடுக்கும் விதமாக மினி பஸ்களை பஸ் நிலையத்தின் மற்றொரு பகுதியில் மட்டுமே நிறுத்த வேண்டும் என மினி பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் அரசு பஸ் நிறுத்துமிடத் திலேயே மினி பஸ் களை நிறுத்த அனுமதி அளிக்க வேண்டும் என வும், ஆட்டோ ஓட்டுநர் கள் மினி பஸ்களை நிறுத்த விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி நேற்று 50க்கும் மேற்பட்ட மினி பஸ்களை பஸ் நிலையத்தில் நிறுத்தி மினி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், உரிமையாளர்கள் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் டவுண் பஸ்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து மினி பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் திடீரென அரசு பஸ்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டதுடன், வெளிமாவட்டங் களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்களையும் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாட்டுத்தாவணி காவல் நிலைய போலீசார் வந்து அனைவரையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். பின்னர் இரு தரப்பினருக்கிடையே சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது.
