சரவணம்பட்டி,
52 ஆவது மாநில அளவிலான ஷார்ட் கன் துப்பாக்கி சூடு போட்டி சென்னை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஷார்ட்கான் பயிற்சி மையத்தில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை ஸ்க்கீட், டபுள் டிராப், ட்ராப் ஆகிய பிரிவுகளில் தனிநபர் மற்றும் குழு, கலப்பு இரட்டையர் போட்டிகள் நடைபெற்றது. இதில் சென்னை,புதுக்கோட்டை, கோவை , வெள்ளகோவில், நாகப்பட்டினம் ,மதுரை, சேலம், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய கிளப்புகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் கோயம்புத்தூர் ரைபிள் அசோசியேஷன் சார்பில் அசோசியேஷன் துணைத் தலைவரும், ஷாட்கன் சீனியர் ஷூட்டர் பக்தவச்சலம் தலைமையில் சுமார் 18 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.


அதில் தனிநபர் பிரிவில் 5தங்கம் 4வெள்ளி 4 வெண்கலம் மற்றும் குழு பிரிவில் 4 தங்கமும் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் 2தங்கம் 2 வெங்கலம் என 21 பதக்கங்களை வென்று கோயமுத்தூர் ரைபிள் அசோசியேஷன் வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு கோயமுத்தூர் பைபிள் கிளப் அசோசியேஷன் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.முன்னதாக இளம் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்த தேசிய அளவிலான சூட்டர்கள் விக்னேஷ் கிருஷ்ணா, மற்றும் விக்ரம் ஆகியோரை அனைவரும் பாராட்டினர்.

கோயம்புத்தூர் ரைபிள் அசோசியேஷன் துணைத் தலைவரும், ஷாட்கன் சீனியர் ஷூட்டர் பக்தவச்சலம் மற்றும் அசோசியேஷன் பொருளாளர் மணிவண்ணன் ஆகியோருடன் பதக்கங்களை வென்ற வீரர்களை படத்தில் காணலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *