கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-

அரியலூர் வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் அரியலூர் மாவட்டத்தில் இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகிறார் அவருக்கு ஜெயம்கொண்டத்தில் கருப்பு கொடி காட்டுவது என மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் அரியலூரில் நடந்தது இந்திய மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு இளைஞர்களை பாதிக்கும் வேலை வாய்ப்பு இன்மை 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்காதது என்பன போன்ற மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் எப்பொழுதும் தேர்தல் அரசியல் மட்டும் குறிக்கோளாக கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரியலூர் மாவட்ட வருகையின் போது மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஜெயங்கொண்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆ சங்கர் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என செயற்குழுவில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் நகர தலைவர் மாமு சிவக்குமார் முன்னாள் மாவட்ட தலைவர் சீனி பாலகிருஷ்ணன் மாவட்ட பொருளாளர் மனோகரன் ஆண்டிமடம் ராஜசேகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலாஜி மற்றும் வட்டாரத் தலைவர்கள் கர்ணன் பாலகிருஷ்ணன் திருநாவுக்கரசு அழகானந்தம் கங்காதுரை ஏ பி எஸ் பழனிச்சாமி நகர துணை தலைவர் சுப்பிரமணியன் மகளிரனி சகுந்தலா உட்பட கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்