கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-
அரியலூரில் நடந்தது திமுக இளைஞரணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகே நடந்த கூட்டத்திற்கு நகர திமுக செயலாளர் இரா முருகேசன் தலைமை தாங்கினார் நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ டி எஸ் சரவணகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார் தலைமை கழக பேச்சாளர்கள் பழ புனிதம் வெங்கடேஷ் ஆகியோர் திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினார்கள்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராசன் அரியலூர் தொகுதி மேற்பார்வையாளர் அன்பரசன் அரசு வழக்கறிஞர் த ஆ கதிரவன் நகர் மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் நகர்மன்ற துணை தலைவர் தங்க கலியமூர்த்தி நகர அவை தலைவர் மாலா தமிழரசன் மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் தங்கை எழில்மாறன் நகர் மன்ற உறுப்பினர்கள் ரேவதி ராமு ராஜேஷ் ராணி சந்திரசேகர் உட்பட ஏராளமாணோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரேம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்
