செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் நடைபெற்றற 15ம் ஆண்டு முளைப்பாலி திருவிழா நடைபெற்றறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கள்ளர் தெருவில் உள்ள ஸ்ரீ மந்த கருப்பண்ண சுவாமி, ஏழைகாத்த அம்மன், காளியம்மன் ஆலயத்தில் முளைப்பாலி திருவிழா நடைபெற்றறது.

விழாவையொட்டி காளியம்மன் கோயிலில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்று, மாலை வைத்தீஸ்வரன்கோயில் கலை நிகழ்ச்சியுடன் பெண்கள் தங்கள் வேண்டுதலை நிறைறவேற்றற வைத்திருந்த முளைப்பாலியை தலையில் சுமந்தபடி குலவையிட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று திருநகரி வாய்க்காலில் முளைப்பாலியை கரைத்தனர்.

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சித் தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் கோவி.ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றறனர்.
ஏற்பாடுகளை கிராமவாசிகள், நாட்டாமை, பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.