நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திய, திராவிட மாடல் முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எண்ணற்ற பல மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதில் ஒரு மைல்கல்லாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் அமைந்துள்ளது.
இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “ஸ்டாலின் கையில் கொடுக்கும் மனுவுக்குத் தீர்வு கிடைக்கும் என்று நீங்கள் நம்பிக் கொடுக்கும் மனுக்களுக்கும், என்னிடம் சொல்லும் குறைகளுக்கும் தீர்வு காணப்படும். ஒவ்வொரு குரலும் கேட்கப்பட வேண்டும். உங்களது குறைகள் தீர்க்கப்பட வேண்டும்” என தன் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
தமிழ்நாடில் வாழும் நகர்புறம், கிராமப்புறம் என அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் ஏழை எளிய நடத்தர வர்கம் என அனைத்து தரப்புக்கும் இத்திட்டம் பெரும் பயனை தரும் என்று நம்புகிறோம். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின் நீண்ட கால பிரச்சனைகள், வெகு சில நாட்களில் முடித்து தரப்படும். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, அனைவருக்குமான பெரும் பயனை தரும் இத்திட்டம் தமிழ்நாடு மக்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது மாறி, கேட்காமலே கதவை தட்டி தமிழ்நாட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கி வருகிறார் நம் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள்.
நாள்தோரும் நாட்டு மக்களின் நலன் பற்றி சிந்திக்கின்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் மட்டுமே, இதுபோன்ற மக்கள் நல திட்டங்கள் அமல்படுத்துவது சாத்தியம். அந்த வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தினை தொடங்கி வைத்த முதல்வரிடம், “முதல்வர் மு. க. ஸ்டாலின் உடன் மக்கள்” இருப்பதாக பல்சமய நல்லுறவு இயக்கம் திடகாத்திரமாக நம்புகிறது.
நாட்டு மக்களின் நலனில் அக்கறையுன் நாட்டிலும், நாட்டு மக்களின் மனதிலும் சிம்மாசனமிட்டு ஆட்சி நடத்தும், தமிழ்நாட்டின் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
வாழ்க திராவிடம் !
வளர்க தமிழ்நாடு !!
ஓங்குக திராவிட மாடல் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் புகழ் !!!
நெஞ்சார நன்றி …
என்றும் நல்லிணக்க பணியில்……
ஹாஜி. ஜெ. முகமது ரஃபி,
தலைவர் – பல்சமய நல்லுறவு இயக்கம்,
உறுப்பினர் – தமிழ்நாடு சிறுபாண்மை ஆணையம்.
