இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஷியாம் பிரசாத் முகர்ஜி பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
கடலாடி அரசு கல்லூரியில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ் இயங்கும் இராமநாதபுரம் மாவட்ட எனது இளைய பாரதம் மற்றும் கமுதி ஸ்ரீ பகவதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து தேசியவாதியும் சுதந்திர போராட்ட வீரர் ஷியாம் பிரசாத் முகர்ஜி 124 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் முனைவர் விமலா அவர்கள் தலைமையிலும் ஸ்ரீ பகவதி அறக்கட்டளை தலைவர் மு.வெள்ளைப்பாண்டியன் முன்னிலையில் பரிசு, பதக்கம் வழங்கப்பட்டது.
முன்னதாக தமிழ்த்துறை பேராசிரியர் சங்கிலிராஜ் வரவேற்று பேசினார், கண்ணி அறிவியல் துறை பேராசிரியர் கலா போட்டியில் நடுவராக இருந்தார், ஆங்கிலத்துறை பேராசிரியர் கலையரசன் நன்றி கூறினார் நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
