திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கர்மவீரர் காமராஜரின் 123- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி தொடக்கப் பள்ளியில் வலங்கைமான் நகர காங்கிரஸ் தலைவர் ஏ.சி. ராஜு, திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் நார்த்தாங்குடி ஜி. பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, அரவத்தூர் வி. மணி, முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.கலியமூர்த்தி, நகர சேவா தள தலைவர் நாடிமுத்து, நன்னிலம் சட்டமன்ற தொகுதி சேவா தள தலைவர் ஜி. ஆறுமுகம், வலங்கைமான் பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஜெகபர் அலி, மணவெளி தெரு மகாலிங்கம், எல்லையம்மன் கோவில் தெரு கலியமூர்த்தி, கள்ளர் தெரு மருதமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சிலேட்டு, சிலேட்டு குச்சி, நோட்புக், பேனா, பென்சில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆலங்குடியில் கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அறையூர் ஊராட்சி கிளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நார்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சிலேட்டு, சிலேட்டு குச்சி, நோட்புக், பேனா, பென்சில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் ,ஆசிரியைகள் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
