மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி த.வெ.க.வின் 2-வது மாநாடு! விஜய் அறிவிப்பு; பூமி பூஜை எளிமையாக நடந்தது!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) 2-வது மாநாடு மதுரையில் வரும் ஆகஸ்டு மாதம் 25-ம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கான பூமி பூஜை எளிமையாக நடந்தது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர் தல் நடக்க உள்ளது. – இதைச் சந்திக்க அனைத்து – கட்சிகளும் தயாராகி வருகின்றன. சட்டசபை தேர் தல் களத்தைப் பொறுத்த வரை தி.மு.க.அணி-அ.தி. மு.க. அணி ஆகியவை இடையே பலத்த போட்டி இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

3-வது அணியாக விஜய் களமிறங்குகிறார். வழக்கம்போல் சீமான் – தனித்து போட்டியிட உள்ளார். இந்த தேர்தலில் விஜய் கட்சி தனித்து நின் றால் அவரது உண்மை – யான பலம் என்ன என்பது – தெரிந்துவிடும்.

விஜய் கட்சி தொடங்கி ஓராண்டு முடிந்து விட்டது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் தான் விக்கிரவாண்டியில் முதலாவது மாநாட்டை நடத்தினார். அதன் பிறகு சென்னை பனையூரில் அவரது கட்சி அலுவலகத்தில் வைத்து நிர்வாகிகளை சந்தித்தார்.

மாமல்லபுரத்தில் கட்சியின் முதலாம் ஆண்டு தொடக்க விழாவையும், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தையும் நடத்தினார்.அதன் பிறகு கோவையில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்தினார். இந்நிலையில் சமீபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அதில் பேசிய போது தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி -இல்லை என்று கூறினார். கூட்டத்தின்போது வேறு சில முடிவுகளும் எடுக்கப்பட்டன. ஆகஸ்டு மாதம் கட்சியின் 2-வது மாநில மாநாடு நடத்தப்படும் என்றும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விஜய் சுற்றுப்பயணம் செய்வார் என்றும் கூறப்பட்டது.

அதன் அடிப்படையில் கட்சி மாநாட்டை எங்கு நடத்தலாம் நிர்வாகிகளுடன் விஜய் என ஆலோசனை நடத்தி வந்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அருகே பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாவட்டங்களை தென் மையப்படுத்தி பிரமாண்டமான மாநாடு ஒன்றை நடத்த விஜய் திட்டமிட்டிருந்தார்.

அதற்காக அவர் மதுரையை தேர்ந்தெடுத்தார். மேலும் பொதுமக்களுக்கு இடை யூறு இல்லாத, அதே நேரத்தில் வாகனங்கள் வந்து செல்ல வசதியாக உள்ள இடத்தை தேர்வு செய்யவும் திட்டமிட்டார்.

அதற்காக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் மதுரையை அடுத்த ஆவியூர் பகுதியில் எலியார்பத்தி என்ற இடத்தில் மாநாடு நடத்த முடிவு செய்யப் பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து த.வெ.க. தலைவர் விஜய் வெ ளியிட்டுள்ள அறிக்கையில் “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும்,கழக தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற் றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி மதுரையில் நடை பெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கி றேன். வாகைசூடும் வரலாறு வெற்றி நிச்சயம், நன்றி” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே நடக்க இருக்கி றது. இதற்காக 70 முதல் 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமிபூஜை பொதுச் செயலளார் புஸ்ஸிஆனந்த் தலைமையில் நடந்தது.

அப்போது சிவாச்சாரியார்கள் வேத. மந்திரங்கள் முழங்க 2-வது மாநில மாநாட்டிற்கான பந்தல்கால் நடப்பட்டது.

இது குறித்து தகவல் வெளியானால் கூட்டம் கூடிவிடும் என்பதற்காக எளிமையான முறையில் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியில் அவர்கள் மட்டும் பங்கேற்றனர்.