மரக்குளம் கிராமத்தில் ஸ்ரீ வில்லாலுடைய அய்யனார் கோவில் வைகாசி பொங்கல் விழாவில் பால்குட ஊர்வலம்
ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர், ஸ்ரீ வழிவிடு விநாயகர், ஸ்ரீ வில்லாலுடைய அய்யனார் ஸ்ரீ கருமேனி அம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ முப்பிடாரி அம்மன், ஸ்ரீ ஊர் காவலன் கோவில் கடந்த 30-ந் தேதி வெள்ளிக்கிழமை காப்புக் கட்டுடன் துவங்கியது.
பின்னர் 4-ம் தேதி புதன்கிழமை ஸ்ரீ காளியம்மன் கோவில் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நாளான நேற்று கிராமத்தின் ஸ்ரீ வழிவிடு விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் மேளதாளம், ஜிப்லா மேளம்
மற்றும் வானவேடிக்கையுடன் 500 க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் தலையில் பால்குடத்துடன் ஊர்வலமாக கண்மாயில் பகுதியில் உள்ள ஸ்ரீ வில்லாலுடைய அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.
கிராம பொது மக்கள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மேலும் இரவு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இன்று கிராமத்தில் இருந்து முளைப்பாரியை ஊர்வலமாக கருமேனி அம்மன் கோவிலுக்கு எடுத்து சென்று பின்னர் ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது
