மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாக ராஜசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கோவில் சன்னதி தெருவில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்து கொள்வதால் பக்தர்கள் சென்று வர பெரிதும் சிரமப்பட்டனர். இதனையடுத்து. மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல செயற் பொறியாளர்கள் சாமுவேல், பொண்ணுரங்கம், மோகன் மற்றும் உதவி பொறியாளர் பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் 22ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மேலும் 22 கடைக்காரர்களுக்கும் தலா 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *