தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம் பாளையம் அருள்மிகு அகிலாண்டீஸ்வரி உடனமர் ஸ்ரீ தென்னீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

தாராபுரம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் சங்கரண்டம் பாளையம் கொற்றை மாநகர் என்னும் கோவில் கொத்தனூர் அருள்மிகு அகிலாண்டீஸ்வரி உடனமர் ஸ்ரீ தென்னீஸ்வர ஸ்வாமி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இத்திருக்கோவிலானது அமராவதி நதிக்கரையில் சேர ,சோழ ,பாண்டிய மன்னர்களால் முடிசூட்டப்பட்டு பட்டக்காரர் வேணாவுடையார் அவர்களது ஆட்சியகமாக தென்கரை நாட்டின் தலைமையகமாக திகழ்ந்த கொற்றை மாநகரானது கொற்றையூர் என்னும் பிற்காலத்தில் அதுவே மருவி கொத்தனூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது தென்கரை நாடுதனில் ஈசன் எழுந்தருளியுள்ளதால் தென்னீஸ்வரர் என்னும் திருநாமம் தாங்கி அகிலத்தை ஆளுகின்ற ஈஸ்வரியாக அகிலாண்டீஸ்வரி அம்பிகையுடன் இத்தலத்தில் அணுகுகிரகம் செய்து வருகிறார்.

இவ்வாலயம் ஆனது கிபி 1516 ஆம் ஆண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அவருக்கு சோழ மன்னருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசமானது விலககுவதற்காக கட்டப்பட்டது என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
அதன் பிற்காலத்தில் தென்கரை நாட்டின் பட்டக்காரர் வேணாவுடையார் வம்ச வழியினரால் பராமரித்து பூஜைகளும் உற்சவங்களும் நடத்தி வருகின்றனர். தெய்வத்திரு ச.கு.கணேஷ் அவர்களது பொறுப்பில் இவ்வாலயமானது பரிபாலனம் செய்யப்பட்டது.

2015 ஆம் ஆண்டு பாலாலயம் செய்து பின்னர் அவரது நல்லாசியுடன் அவரது குமாரரும் இளைய பட்டக்காரருமான பரம்பரை தர்மகர்த்தாவுமான ச.க. சேது ராஜேஸ்வரன் அவர்களது மேற்பார்வையில் கும்பாபிஷேகம் ஆனது நேற்று நடைபெற்றது.. கும்பாபிஷே நிகழ்வை தொடர்ந்து நாள் முழுவதும் அன்னதானம் நடைபெற்றது கும்பாபிஷேகம் முடிந்து மறு தினத்தில் இருந்து 48 தினங்கள் மண்டல பூஜைகள் நடை பெறுகிறது நிகழ்ச்சியில் மணிப்பூர் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அவர்களை பள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திரு ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவருமான கே எஸ் என் வேணுகோபாலு தேன்மொழி தம்பதியினர் வரவேற்றனர்

மாவட்ட நீதிபதி சக்திவேல் தாராபுரம் முன்சீப் மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி அவர்களை புனிதம் அர்ஜுன், சுகன்யா சம்பத் ஆகியோர் வரவேற்றனர்.மற்றும் ஸ்ரீ லட்சுமி அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாகிகளான கே. என்.மணிவண்ண சதேவன் கே .என். கௌதம செந்தில்வர்மன் கும்பாபிஷேகத்தை சங்கரண்டாம்பாளைய்ம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் மற்றும் தாராபுரம் திருப்பூர் ஈரோடு ஒட்டன்சத்திரம் என பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.