பரமத்தி வேலூர் ஞாயிற்றுக்கிழமை வார சந்தையில் முறைகேடாக அதிக சுங்கவரி கட்டணம் வசூலிப்பதாக இளம் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சௌந்தர்ராஜன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு வந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்
நாமக்கல் மாவட்டம் .பரமத்தி வேலூர் ஞாயிற்றுக்கிழமை வார சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் முறைகேடாக சுங்க வரி கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்வதாக எங்களது இளம் விவசாயிகள் சங்கத்திற்கு புகார் வந்தது.


இது சம்பந்தமாக கோட்டாட்சியரிடம் மனு அளித்தோம் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் வேலூர் பேரூராட்சி நிர்வாகம் வார சந்தையை குத்தகை எடுத்தவரிடம் சேர்ந்து கொண்டு விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பை உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

. 11.8.2024 வார சந்தையை ஏலம் விட்டிருக்கின்றனர். என்ன விலை நிர்ணயம் செய்தார்களோ அதை வசூல் செய்யாமல் சுங்கவரி எடுத்தவர்கள் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை வசூல் செய்து வருகின்றனர். சுங்கவரி வசூல் செய்யும் கடைக்காரர்களிடம் ரசீது கொடுப்பதில்லை.

இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது இங்கு இளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விவசாயிகள் என இந்த சுங்க வரி பிரச்சனை தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம். ஆனால் எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை வெறும் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறுகிறார்கள்.

அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகின்றனர் இதை இளம் விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது . மேலும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மூவேந்திரபாண்டியன் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் எங்களுக்கு சட்டத்தில் இடம் இருக்கிறது நாங்கள் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று கூறுகிறார்.

நடைமுறையில் என்ன கட்டணமோ அந்த கட்டணத்தை வசூலிக்குமாறு பலமுறை கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை புரிந்து கொள்ளாமலேயே வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது இளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடுமையாக கண்டிக்கின்றோம் என்று தெரிவித்தார்.