நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி பாணாசுரன் வழிபட்ட தலமாகவும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர்களாலும் பாடல் பெற்ற தலமாகவும், அகழ் என்னும் தீர்த்த குளம் நடுவில் அமைந்துள்ள இக்கோவிலில் அப்பர் ஐக்கியமான வரலாறுடைய இந்த அக்னீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரமோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே 30-ந்தேதி வரை நடக்கிறது.


தேரோட்டம்
விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சாமிகள், பொருளாளர் பரமானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *