C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..

விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 18,713 மெட்ரிக் டன் இருப்பு உரங்கள் இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

உள்ள ஏரி மற்றும் குளங்களின் வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான பயனாளிகள் வண்டல் மண் எடுப்பதனை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும். விளைநிலங்கள் சீரான நீர்பாசன வசதியை பெறுவதற்கு பிரதான வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும். நிரந்தர நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், தற்போது செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வாகனங்கள் வந்து செல்ல சாலை வசதிகளை மேம்படுத்திட வேண்டும்.


விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உலர வைப்பதற்கான களங்களை தேவைப்படும் இடங்களில் போதுமான அளவிற்கு அமைத்து தர வேண்டும். அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்களின் பயன்களைப்பெற பட்டா. சிட்டா போன்ற ஆவணங்கள் தேவைப்படுவதால் வருவாய்த் துறையினர் காலதாமதமின்றி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான மின் இணைப்புகளை பதிவு மூப்பின் அடிப்படையில் வழங்கிட வேண்டும் விவசாயிகளுக்கு தடையில்லாத மும்முனை மின்சாரம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன் கருதி திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அரசால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை விவசாயிகளுக்கு கிடைத்திட விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 5,144 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 1,532 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2,008 மெட்ரிக் டன்னும், காம்ப்லக்ஸ் உரம் 8,529 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,501 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 18,713 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது.

கடந்த விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 157 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 153 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது.மேலும், 4 மனுக்கள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
பட்டா குறித்த கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் கையிருப்பில் உள்ளன. மேலும், விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரம் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும். நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள மண் திட்டுகள், செடி கொடிகளை அகற்றிடவும். மழைநீரினை வீணாகாமல் ஏரிகுளங்களில் தேக்கி வைக்கவும், சேதமடைந்த பாதிப்புக்குள்ளான சாலைகளை சீரமைக்கவும் விவசாயிகளுக்கு தடையில்லாமல் மும்முனை மின்சாரம் கிடைத்திடவும் விவசாயிகளால் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி, வேளாண்மை இணை இயக்குநர் லட்சுமிகாந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர். விவசாயம் ஜானகிராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சொர்ணலட்சுமி,வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறைகளின் அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டாரங்களின் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *