எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன, மந்த கருப்பண்ணசாமி, முனீஸ்வரர்,விநாயகர், முருகர் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அருகே மந்த கருப்பண்ணசாமி, முனீஸ்வரர், விநாயகர் முருகர் உள்ளிட்ட கோயில்கள் தனித்தனியே அமைந்துள்ளது.சிதிலம் அடைந்த இக்கோயில் கிராம மக்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி அன்று முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை நான்காவது கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகதியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது
தொடர்ந்து சப்த கன்னிகள் எழுந்தருள கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் விமானத்தை அடைந்தது.அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.