பெரம்பலூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் பேரணி நடைபெற்றது
01.04.2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு ,உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்
இடைநிலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும் அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்
சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை முறைப்படுத்திட வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி நடத்தினர்
இப்பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
