தென்காசி.

தென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் பங்கேற்ற வாழ்வாதார கோரிக்கை பேரணி நடைபெற்றது.

தென்காசியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார் ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் பிச்சைக்கனி , கோபி, முருகேஷ், ராஜேந்திரன், ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மாடசாமி துவக்க உரையாற்றினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் இளங்கோ, கணினி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் ஜெபக்குமார்.மாநிலபொது செயலாளர் மார்த்தாண்டபூபதி, நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர் அமைப்பின் ஜெய்சங்கர், மண்டல ஜெயளாளர் சேகர், பிச்சு மணி, செவிலியர் சங்கத்தை சேர்ந்த மோனிக்கா. மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க தலைவர் ராஜ்,தமிழ் நாடு முதுகலை ஆசிரியர் கழகத்தின் தலைவர் காளிராஜ், மற்றும் மூட்டா மண்டல பொறுப்பாளர் பேராசிரியை இசக்கியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக வாழ்வாதார கோரிக்கை பேரணி தென்காசி உழவர் சந்தையில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.இந்த பேரணியில் வாழ்வாதார பிரச்சனைகளான பழைய ஓய்வூதியம் , சரண் விடுப்பு,பள்ளி கல்வி துறையின் அரசாணை 243 ரத்து, அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல்,அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகைவழகுதல், அரசு துறைகளில் தனியார் மூலம் பணியாளர்களை தேர்வு செய்யும் முறையினை கைவிடுவது தொடர்பான கோரிக்கைகள் கோஷங்களாக எழுப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஜாக்டோ ஜியோவின் நிதி காப்பாளர் சதிஷ் குமார் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.