கும்பகோணம் கொட்டையூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் இருதயதனராஜ் தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம் மண்டல குழு தலைவர் ஆசைத்தம்பி, மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, எஸ்எம்சி தலைவி பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக தேசிய நல்லாசிரியர் பன்னீர்செல்வம், நல்லாசிரியர்கள் அறிவுடைநம்பி, மோகன்தாஸ், வரலட்சுமி, ஓய்வு பெற்ற ஆசிரியர் காணிக்கைராஜ், தலைமை ஆசிரியர்கள் மரகதமணி, ரேவதி மஞ்சுளா, பிரசன்னலட்சுமி, பிரான்சிஸ் சேவியர், பட்டதாரி ஆசிரியர்கள் விநாயகர் மூர்த்தி, சிவதாஸ், மேரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்மாறன், தமிழ்குமரன், ஆசிரியர்கள் ஹென்றி, புவனேஸ்வரி மற்றும் பிராங்கிளின் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் பல் திறன் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைத்து மாணவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர் கோமலமகேஸ்வரி நன்றி கூறினார்.