திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி கூட்ட அரங்கில் 29/03/2025 அன்று நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை சேர்மன் ந. முரளி, ஆணையர் சுரேந்திர ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 39 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நகரமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது துறையூர் பழைய பேருந்து நிலையத்தை ரூபாய் 14 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தவும், பொது பணி துறை நீர் வள ஆதார துறை கட்டுப்பாட்டின் கீழ் சின்ன ஏரியின் பயன்பாட்டு உரிமையை நகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கி அரசானை வெளியிடப்பட்டதற்கு உறுதுணையாக இருந்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேருவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 21வார்டு உறுப்பினர் தீனதயாளன் தனது வார்டில் பழுதடைந்த சிறிய பாலம் அமைக்கவும், பழைய நிலைப்படி தெருவில் குடிநீர் பைப் அமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்றுடன் பணி நிறைவு பெறும் பொறியாளர் மகாராஜனுக்கு நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் கவுன்சிலர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் நகராட்சி பொறியாளர் எஸ் மகாராஜன், மேலாளர் சுகாதார ஆய்வாளர் முரளி நகரமைப்பு ஆய்வாளர் சாந்தி, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், அம்மன் பாபு,இளையராஜா, சுதாகர், கார்த்திகேயன், ஜானகிராமன், செந்தில்குமார், நித்தியா கிருஷ்ணமூர்த்தி, சுமதி மதியழகன், முத்து மாங்கனி , கௌதமி மற்றும் அமைதி பாலு, தீனதயாளன் ,சந்திரா, திவ்யா, ஹேமா உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்