அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள் தயாளன், அஜயன்,கிப்டன்வேதாபால்,
ஹரிஷ், நாவரசு,சுஜித்குமார், ஆகியோர் கிராம வேளாண்மைப் பணி அனுபவத்திட்டத்தினை(RAWE )மேற்கொண்டர்.
இதில் ஒரு அங்கமாக உலக காடுகள் தினத்தை(21/03/2025) முன்னிட்டு அலங்காநல்லூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காடுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் மாணவர்கள் காடுகளின் முக்கியத்துவத்தையும் அதன் பயன்பாட்டையும் பள்ளி குழந்தைகளிடம் உறையாடினர்.
மேலும் மரங்களின் முக்கியத்துவத்தையும் அதன் வளர்ப்பு பற்றியும் உரையாடினர். காடுகளின் அழிந்து வரும் நிலையை பற்றி பேசினர்.காட்டு விலங்குகள் ஏன் கிராமத்திற்குள் வருவதை பற்றி பேசினர். மேலும் மரம் வளர்ப்போம்!! மழை பெறுவோம்!! என்ற வாசகத்தைக் கூறி குழந்தைகளோடு இணைந்து உறுதிமொழி ஏற்றனர்.வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று குழந்தைகளிடம் வலியுறுத்தினர்.