ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் படுகொலை! – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
நெல்லை மாவட்டம் டவுனில், ஒய்வுபெற்ற காவல் உதவி ஆவாளர் ஜாகிர் உசேன் பிஜிலி என்பவர் இன்று அதிகாலையில் பள்ளி வாசளில் ஷஹர் தொழுகையை முடித்து விட்டு வெளியில் வந்த போது சமூக விரோதி கும்பல் மிக கொடூர மான முறையில் படுகொலை செய்ய பட்டதை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.
படுகொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலி,
முர்த்தின் ஜஹான் தைக்காவுக்கு சொந்தமான வக்ஃப் இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த சட்டரீதியாக போராடிய காரணத்திற்க்காக இந்த படு கொலை சம்பவம் அரங்கேறியதாக தெரிய வருகிறது.
வக்ஃப் சொத்தை சட்டரீதியாக மீட்கும் முயற்சியில் உள்ள தனக்கு எதிராக ஒரு குழு கொலை திட்டம் மேற்கொண்டுவருவதாக அவர் கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் அவர் தெரிவித்தார். படு கொலை செய்ய பட்ட ஜாகீர் உசேனுக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்க தவறியினால் இச்சம்பவம் அறங்கேறி உள்ளது. இது போன்று காவல் துறையின் மேத்தன போக்கால் சமூக ஆர்வாளர்கள் மற்றும் அரசியவாதிகள் பலரும் படு கொலைக்கு ஆலாக்க பட்டனர். என்பதை சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.
ஜாகீர் உசேன் பிஜிலியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.மேலும் ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பிடு வழங்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
எனவே – ஜாகீர் உசேனை மிகவும் கொடூரமான முறையில் படு கொலை செய்த சமூக விரோதி கும்பலை கைது செய்யவதுடன் இந்த படு கொலையை நிகழ்த்த திட்டம் போட்டு தூண்டு கோளாக இருந்தவர்களையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
Leave a Reply