அரியலூர் மின்வாரியத்துக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர் கல்லூரி சாலையிலுள்ள மின்சார வாரிய அலுவலகம் முன் அனைத்து நிலை பொறியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம் தெற்குப் பிரிவில் கடந்த 6.3.2025 அன்று, மின்கம்பத்தில் ஏரிய கேங்மேன் ராஜராம், கவனக்குறைவுக் காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்திருப்பதையடுத்து, மேற்பார்வையாளர் ரவிசந்திரன், கேங்மேன் பெரியசாமி ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த பிரச்னையை திசை திருப்பி, அலுவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக அக்ஸ்டீன் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரிய அலுவலர்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து நிலை பொறியாளர்களும் அச்சமின்றி பணிப்புரிய உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு பெரம்பலூர் மின் பகிர்மான பொறியாளர் கழகச் செயலர் ஆர்.பொன்சங்கர் தலைமை வகித்தார். தலைவர் கே.ஆர்.ராஜேந்திரன், அரியலூர் கோட்ட தொமுச திட்டத் தலைவர் திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *