மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தமிழ் சங்க அறக்கட்டளை அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் சங்க தலைவர் கீ.து.ச சோலைமலை தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் தாமோதரன் வரவேற்புரையாற்றினார், தமிழ்ச்சங்க ஆண்டறிக்கையை ரங்கசாமி வாசித்தார்.

நிதிநிலை அறிக்கையை பொதுச் செயலாளர் வெங்கடாசலம் சமர்ப்பித்தார் நிகழ்ச்சியில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த உறுப்பினர்கள் 12 பேருக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கீ.து.ச. துரைராஜ், அறக்கட்டளை உறுப்பினர்கள் வக்கீல் வீரபத்திரன் முன்னாள் ஆசிரியர் ஏ .வி. ராமசாமி, அமைப்பு செயலாளர் சிவராசன்,எம்.சு மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவாக முன்னாள் ஆசிரியர் ஜெயராமன் நன்றியுரை ஆற்றினார்