தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சி அரசு மற்றும் அரசியல் பிரமுகர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், அடிப்படை வசதிகளை முறையாக செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.

மேலும் பொம்மிடி பகுதியின் வளர்ச்சிக்காக கூடுதல் இரயில்கள் பொம்மிடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டியும், பொம்மிடியை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைப்பது, ஏற்காடு மலைப்பகுதிக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தருவது, பொம்மிடி காலிக்கரம்பு தருமபுரி வழியாக சாலை வசதி ஏற்படுத்திக் கொடுப்பது,

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்துவது போன்ற பல்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை வைக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பொம்மிடி பகுதி மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் இப்பகுதி மக்களோடு இணைந்து தாமும் போராட தயாராக உள்ளதாகவும் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி உறுதியளித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் தமிழ் அன்வர் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களிடம் எடுத்துக் கூறி பொம்மிடியில் கூடுதல் ரயில்கள் நிறுத்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டத்தில் அழுத்தம் கொடுக்க கோரிக்கை வைப்பதாக உறுதியளித்தார்.

மேலும் பல்வேறு காட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் கட்சி, சாதி மத பாகுபாடின்றி அனைவரும் பொம்மிடி பகுதியின் வளர்ச்சிக்காக ஆலோசனைகள் கூறி முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி கூறினர்.

இந்த கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சங்கத்தின் பொறுப்பாளர்கள், ஆசாம் கான், ஜெபசிங், அன்பழகன், சிவகுமார் மற்றும் ஏராளமானவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அடிப்படை வசதிகளை அரசு செய்ய தவறும் பட்சத்தில் அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.