திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பகல் 12- மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

மாலை 6- மணிக்கு சுமங்கலி தாய்மார்கள் கலந்து கொண்ட 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான தாய்மார்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று அனைவருக்கும் அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ஆய்வர் க. மும்மூர்த்தி, செட்டித்தெருவாசிகள் மற்றும் ஸ்ரீ சீதாதேவி நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.