நாகப்பட்டினம்,ஜூலை.28-
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் முதல் இடம் பிடித்து நாகை மாவட்ட அளவிலான கபடி விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் குமார், உதவி தலைமை ஆசிரியர் சுகுமாரன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அன்பானந்தம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்கள் சௌரிராஜன், லெனின் ஆகியோரையும் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *