ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,மதுரை ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை மற்றும் கமுதி என்விஷன்ஆப்டிகல்ஸ் இணைந்து நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர் இதில் டாக்டர் சீனிவாசன் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது.

மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரிகள் ஜெயசெந்தில்,கணபதி சுப்பிரமணியன் மற்றும் ஆப்டிகல் உரிமையாளர் முகமது நசீர் முகாமிற்கான அனைத்துஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இதில் சிறுவர்கள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என 238 பேர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இம்முகாமில் சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிக்கப்பட்டவர் களுக்கு
விழித்திரை சிகிச்சை, கண்ணீர் அழுத்த நோய், மாறுகண் உட்பட பல்வேறு
சிகிச்சை செய்யப்பட்டது.

70 பேருக்கு கண் கண்ணாடிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 38 நபர்கள்
கண்புரை அறுவை சிகிக்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.மேலும் அறுவை சிகிச்சைக்கான செலவில் 50 சதவீதம் சலுகை செய்து தரப்பட்டது.