வேப்பூர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கோவில் உண்டியல்களை திருட காரில் வந்த மூன்று பேரை கைது போலிசார் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்
வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாரதி மற்றும் போலீசார் வேப்பூர் அடுத்த திருப்பெயர் கிராமத்தில் பகுதியில் ரோந்து பணியில்ஈடுபட்டிருந்தனர்
அப்போது சந்தேகப்படும்படியாக திருப்பெயர் கிராமத்திற்கு வந்த டிஎன் 39 ஏஇ 3139 என்ற எண்ணுள்ள காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் நான்கு பேர் இருந்தனர்
அவர்கள் மீது சந்தேகப்பட்டு எஸ்ஐ பாரதி மற்றும் போலீசார் வேப்பூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர் அதில் கரூர் மாவட்டம் பகுதி பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் குருமூர்த்தி (வயது17) கரூர் வெள்ளியணை அம்மன் கோயில் தெரு, வெள்ளிநாதன் மகன் வேதவன் ( வயது 38), வெள்ளியணை மணி மகன் சூரியா (வயது34) ஆகியோர் என தெரிய வந்தது
இதில் காரை ஓட்டி வந்த சீனிவாசன் மகன் பாலசுப்பிரமணியன் தப்பி ஓடிவிட்டார் மேற்கண்ட மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர் மேலும் தப்பி ஓடியவரை போலீசார் வருகின்றனர் வேப்பூர் பகுதி கோவில் உண்டியலை கூகுள் மேப் உதவியுடன் காரில் தேடவந்தவர்களை போலீசார் கைது செய்தனர் மேலும் இது போல் வேறு எங்கெங்கே திருடியுள்ளனர் என போலீசார் மேலும் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்
