திருச்சி மாவட்டத்தில் குட்கா விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், துவரங்குறிச்சி, ஜீயபுரம், பெட்டவாய்த்தலை, புலிவலம், நவல்பட்டு, திருவரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது. பெட்டிக்கடைகளில் குட்கா விற்றதாக ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் 2000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மண்ணை
க. மாரிமுத்து.