பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.

பாபநாசம் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த புண்ணியநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி….

பள்ளி குழந்தைகளுக்கு சமையல் அறையில் பாட நடத்தும் அவல நிலை….

குடிநீர், கழிவறை உள்பட நவீன வசதிகளுடன் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை ஒன்றியம் வையச்சேரி ஊராட்சி புண்ணியநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
அமைந்துள்ளது.

இந்த பழமையான தொடக்கப் பள்ளியின் மேற்கூரை கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு இடிந்து பள்ளி வகுப்பறையின் உள்ளேயே விழுந்துவிட்டது.
இதனால் பள்ளி குழந்தைகள் படிக்க முடியாமல் அருகில் உள்ள சமையலறையில் படித்து வருகின்றனர் மாணவ மாணவிகளுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் இல்லாமல் கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளது .

மேலும் இந்தப் பள்ளியில் 120 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வந்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் பணியாற்றிய பள்ளி ஆகும்.
தற்போது இந்த பள்ளியில் ஒரு ஆசிரியரும் ,குறைந்த மாணவர்களே படித்து வருகின்றனர் .

இந்தப் பள்ளியின் மேற்கூரை கட்டிடம் இடிந்து விழுந்ததால் மாணவ மாணவிகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர் இதனால் இந்த பள்ளியில் சேர்க்காமல் வெளியூர்களில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.

எனவே போர்க்கால அடிப்படையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் , பள்ளித்கல்வி துறையும் இடிந்து விழுந்த புண்ணியநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடமும் , நவீன வசதிகளுடன் கூடிய குடிநீர் கழிப்பறை கட்டிடங்கள் கட்டித் தரவேண்டும் என கிராம மக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.