திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் நெம்மேலி வருவாய் கிராமத்தில் தமிழக முதல்வரின் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்பு முகாம் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை சார்பில் நடைபெற்றது.
இம்முகாமில் தோட்டக் கலை துணை அலுவலர் ஞானசேகரன் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சிவமணி கலந்து கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர் கலந்து கொண்டு கால்நடை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
கூட்டுறவுத்துறை சார்பில் சந்துரு, மணிகண்டன் திட்ட விளக்கவுரை ஆற்றினார். இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிமாறன், ஊராட்சி செயலாளர் ரமேஷ், ஊராட்சி உதவியாளர் பிரியங்கா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட 80 விவசாயிகளுக்கு தோட்டக்கலை மலை பயிர்கள் துறை சார்பில் ஆறு வகையான காய்கறி விதைத் தொகுப்பு வழங்கப்பட்டது.
