இராமநாதபுரம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின் பேரில், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் இராமநாதபுரம் ஆன்ரூஸ் மகளீர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட கல்வி அலுவலர் சங்கர் தலைமையேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் இடைநிலைக்கல்வி நேர்முக உதவியாளர் ஆரோக்கியதாஸ் முன்னிலையில் நிகழ்ச்சி நடை பெற்றது. நாட்டுநலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் அனைவரையும் வரவேற்றார்.
பயிற்சியில், என்.எஸ்.எஸ் மாணவர்களின் தொடர்பணிகள், போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மேலும் காலாண்டுத் தேர்வு விடுமுறையில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம் குறித்து திட்ட அலுவலர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.
முடிவில், திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் நன்றி தெரிவித்தார். இப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலுமிருந்து என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
