கோவை மாநகர் மாவட்ட லெஜண்ட் சரவணன் ரசிகர் நற்பணி மன்ற ஆலோசனை கூட்டம் புதிய அலுவலகம் திறப்பது தொடர்பாக மாநில,மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை ஆலோசனைக் கூட்டத்தில்
பிரபல தொழிலதிபரான சரவணன் திரைப்பட துறையில் தனது சொந்த தயாரிப்பில் உருவான தி லெஜண்ட் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் எல்லா துறைகளிலும் தன்னால் சாதிக்க முடியும் என நடிகராக அவதாரமெடுத்த லெஜண்ட் சரவணின் தன்னம்பிக்கையை கண்ட ஏராளமானோர் அவரது ரசிகர்களாகி உள்ளனர்..
இந்நிலையில் கோவையில் அவரது ரசிகர்கள் சார்பாக லெஜண்ட் சரவணன் ரசிகர் மன்ற அலுவலகம் துவங்க உள்ள நிலையில் இது தொடர்பான ஆலோசணை கூட்டம் பூமார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..
லெஜண்ட் சரவணன் ரசிகர் நற்பணி மன்றத்தின் மாநில தலைவர் முத்து துரை தலைமையில் நடைபெற்ற இதில்,கோவை மாநகர் மாவட்ட ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
கூட்டத்தில் ரசிகர் நற்பணி மன்ற புதிய அலுவலகம் அமைப்பது,மற்றும் அவரது புதிய படத்தின் வெளியீட்டின் போது விழா கொண்டாடுவது,மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங குவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது..
கூட்டத்தில் லெஜண்ட் சரவணன் ரசிகர் மன்ற இளைஞரணி மாநில செயலாளர் டேனியல் ராஜ்,சினிமா துறை தலைவர் ஜெயக்குமார்,குட்டிராஜ்,துணை தலைவர் குணா,கோவை மாவட்ட தலைவர் யாகூப்,செயலாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக கோவை மாவட்ட நடிகர் சங்க தலைவர் சாகுல் கலந்து கொண்டார்..
