மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி கோவை மாவட்ட அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளது. கோவையில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் திருக்குறள் பேச்சுப் போட்டி நடைபெற்றது
இதில் இடைநிலைப் பிரிவில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 228 மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி பதினொன்றாம் வகுப்பு மாணவர் பிரகலாதன் குமாரசுவாமி மேல்நிலைப் பிரிவில் முதலிடம் பெற்றார்.
பதினோராம் வகுப்பு மாணவி குழலினியால் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர் சஷ்வந்த் பாலாஜி ஆகியோர் ஊக்க பரிசு பெற்றனர். இடைநிலை பிரிவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் வினீஸ் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவி பூர்ண ரித்திகா ஆகியோர் ஊக்க பரிசு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியரை கோவை காட்டூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு ஐயா சாமி பாராட்டி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி எட்டாவது முறையாக மாநில அளவிலான இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அத்துடன் ஐந்து முறை மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மாநில அளவில் சென்னையில் வரும் அக்டோபர் நான்காம் தேதி நடைபெறும் இறுதி சுற்று பேச்சு போட்டியில் பங்கேற்க உள்ள மாணவன் பிரகலாதன் குமாரசுவாமியை பள்ளி நிர்வாக அறங்காவலர் திரு. கே. ராமசாமி மற்றும் பள்ளிச் செயலர் சிந்தனை கவிஞர் முனைவர் கவிதாசன், பள்ளி முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் முனைவர் சக்திவேல், புல முதன்மையர் டாக்டர் ஷீலா கிரேஸ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்
