துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை அருகில் உள்ள பிரசன்னா மஹாலில் 22/08/2025 அன்று துறையூர் நகர லயன்ஸ் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமில் துறையூர் நகர லயன்ஸ் சங்க தலைவர் சிவக்குமார் தலைமை தாங்க, செயலாளர் சதீஷ், பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்கூச்சம், அந்திமாலை, கண்புரை,கண்ணில் நீர் வடிதல்,ஆகிய கண் சம்பந்தமான நோய்களுக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் நவேளா, டாக்டர் பைஜா , ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் மற்றும் ரம்யா,காயத்திரி உள்ளிட்ட செவிலியர்கள் அடங்கிய கண் மருத்துவ குழுவினர் முகாம் பணியில் ஈடுபட்டனர். இம்முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

இதில் சுமார் 120 நபர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை, கண்ணுக்கு லென்ஸ் பொருத்த தேர்வு செய்யப்பட்டனர்.இம் முகாமில் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பொது மக்களுக்கு சிறப்பாக உதவி செய்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்