வேப்பூர்
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வேப்பூர் பகுதியில் உள்ள கிராம பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பெட்டிசன் இயக்கம் சார்பில் அனைத்து கட்சிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சி இந்திய மக்கள் கட்சி மாநில தலைவர் இளையநிதி தலைமை தாங்கினார் பெட்டிஷன் இயக்கம் வேப்பூர் வட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்றார், தனி ஒருவன் கட்சி மாநில தலைவர் உதய சூரியன், தேசிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் ராஜாசிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மண்ணுரிமை போராளி இயக்க தலைவர் க. திருவள்ளுவன். பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் சு. திருமாறன், இந்திய குடியரசு கட்சி மாநில முன்னாள் பொதுச் செயலாளர் மங்காபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு கிராம பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விளக்கினார்கள்
இதில், இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் கதிர்வேல் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ் மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கம், பெட்டிஷன் இயக்கம். தேசிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்
