மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.84 பகுதிகளுக்கு வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மேயர் இந்திராணி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதை பார்வையிட்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாமினை கடந்த 15.07.2025 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் துவக்கி வைத்தார். அதன் தொடர் நிகழ்வாக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (வார்டு எண்.84) வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாண்புமிகு மேயர் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையர் ராதா, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் சித்ரா, சுகாதார அலுவலர் திருமால், மாமன்ற உறுப்பினர் போஸ்முத்தையா உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண் 40 பகுதிக்குட்பட்ட வண்டியூர் தாகூர் வித்யாலயா மேனிலைப் பள்ளியில் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
