துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் செங்குந்தர் துவக்க பள்ளியில் நேற்று (ஆக-21)14 மற்றும் 15 வது வார்டுகளுக்கு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.
இம்முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
உடன் துணைத் தலைவர் , நகர செயலாளர் மெடிக்கல் ந. முரளி,15வது வார்டு கிளை செயலாளர் “ரியல் எஸ்டேட்” மணிகண்டன், 14வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் வட்டாட்சியர் சிவகுமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன்,மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் இளவரசி, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் ஆகியோர் இருந்தனர்.
இம்முகாமில் துறையூர் நகராட்சிக்குட்பட்ட 14, 15 வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா, ரேசன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.இம்முகாமில் 15 அரசு துறையை அதிகாரிகள் மனுக்களை பெற்றனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
