கோவை

ஆவணி மாதம் அமாவாசை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆவணி மாதம் பக்தி மாதம் மட்டுமின்றி, புண்ணிய பலன்கள் பலவும் தரும் மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்புக்குரியதாகும்.மகாளய பட்சம் துவங்குவதற்கு முன்பு வரும் அமாவாசை என்பதால் இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள்,பூஜைகள், தானம் ஆகியவற்றிற்கு சிறப்புகளும் பலன்களும் அதிகம்.

அந்த வகையில் கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பிரிவில் உள்ள ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு சிவஸ்ரீ ஞானசேகர சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மாகாளிக்கு மகா அபிஷேகமும், உச்சிக்கால பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வக்ரகாளியம்மனை வழிபட்டனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.