அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:


அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சி பி ராதாகிருஷ்ணன் ஒரு ஆர் எஸ் எஸ் காரர் என்பதை அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன்

இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சனரெட்டி அவர்களை தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் அனைவரும் சுதர்சனரெட்டியை ஆதரிப்பார்கள் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு மாநில செயலாளர் சண்முகம் கூறினார்

பின்பு அரியலூர் மாவட்ட சிஐடியு செயலாளர் தோழர் துரைசாமி மகன் ஸ்டாலின் கனிமொழி திருமண வரவேற்பில் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்

மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாவட்ட செயலாளர் எம் இளங்கோவன் மூத்த தோழர் சிற்றம்பலம் மணிவேல் எல்ஐசி கிருஷ்ணன் துரை அருணன் சந்தானம் துரை ஜோதிபாசு உட்பட ஏராளமானோர் வாழ்த்துரை வழங்கினார்கள்