கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறார் திரைப்பட போட்டி நடைபெற்றது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
மகிழ் முற்றம் மாணவர் குழுக்கள் வாயிலாக பள்ளிகளில் மாதம் தோறும் திரைப்படம் மன்றம் சார்ந்து திரையிடப்படுகிறது.
திரைப்படம் சார்ந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் கதை வசனம், ஒளிப்பதிவு, நடிப்பு என்ற தலைப்பில் மன்ற போட்டிகள் நடைபெற்றது. கதை வசனம் என்ற தலைப்பில் ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான் என்ற மூன்று நிமிட படத்திற்கு வசனங்களுடன் கதை எழுதுதல், ஒளிப்பதிவு என்ற தலைப்பில் எனது பள்ளியைச் சுற்றியுள்ள பல்வேறு வகையான மரங்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் என்ற தலைப்பில் இரண்டு நிமிட திரைப்படத்தை உருவாக்குதல், நடிப்பிற்கு தேவையான பொருளையும் உடன நடிக்கும் நபரையும் பயன்படுத்தி உங்கள் கிராமத்தில் நீங்கள் போற்றும் அல்லது உங்களுக்கு பிடித்த ஒரு நபரை போல நடிக்கவும் உள்ளிட்ட தலைப்புகளில் போட்டி நடைபெற்றது.
பள்ளி அளவில் நடைபெற்ற திரைப்பட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ஒன்றிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
பள்ளி அளவிலான போட்டிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. நிறைவாக ஆங்கில ஆசிரியர் சிந்தியா நன்றி கூறினார்.
